சுடச்சுட

  

  புதுவை சுற்றுச்சூழல் கல்விக் கழகம் சார்பில் இலவச மூலிகை பயிற்சி முகாம் வரும் 16ஆம் தேதி மேரி உழவர்கரை அய்யனார் தெருவில் மூலிகை தோட்ட வளாகத்தில் நடக்கிறது.

  சுற்றுச்சூழல் கல்விக் கழகம், சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் மூலிகைகளின் பயிர்கள், தாவரவியல் பெயர்கள், பயன்கள்,

  பயன்படுத்தும் முறைகள், செயல் விளக்கங்கள் ஆகியன பற்றிய வகுப்புகள், மூலிகை தோட்டத்திலேயே நடத்தப்படும்.

  மேலும் விதைகள் சேகரிப்பு, நாற்றங்கால் உருவாக்கம், மூலிகை தோட்டம், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், களை எடுப்பு மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம்,

  மூலிகை வைத்தியம், இயற்கை உணவு குறித்து பயிற்சி தரப்படும். நண்பகல் உணவு, சான்றிதழ் தரப்படும்.

  விருப்பமுள்ளோர் தங்கள் பெயர், விவரங்களை கீழ்க்காணும் முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது தொலைபேசி மூலமோ 14ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

  சிஎஸ்.ராமநாதன், 1, முதல் தெரு, சாய்பாபா நகர், (சுப்பையா நகர் எதிரில்), அரியாங்குப்பம், புதுச்சேரி-7. தொலைபேசி-9629962973.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai