Enable Javscript for better performance
இங்கிலாந்து பல்கலை.யுடன்-மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்து பல்கலை.யுடன்-மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    By புதுச்சேரி,  |   Published on : 27th January 2015 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவக் கல்வி ஆராய்ச்சி தொடர்பாக இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகத்துடன், புதுவை மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள டுண்டி பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியுடன், புதுவை ஸ்ரீ பாலாஜி வித்யாபீடம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    டுண்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி டீன் கேரி மயர்ஸ், இயக்குநர் மேரி ஸ்காட், முடநீக்கியல் துறை நிபுணர் ராமி அபோட், விரிவுரையாளர் சுசி ஸ்காபில்ட் அடங்கிய குழு கடந்த 22-ம் தேதி முதல் சிலநாள்கள் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மகாத்மா காந்தி கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. மருத்துவக் கல்வி ஆராய்ச்சி தொடர்பாக இருதரப்பினரும் இணைந்து செயல்பட தீர்மானித்தனர்.

    இதன்மூலம் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். பொது மருத்துவம், பல், நர்ஸிங், பாடத்திட்டங்களில் இரு தரப்பினரும் இணைந்து ஆய்வு செய்வர். இதன் மூலம் தரமான மருத்துவக் கல்வி வாய்ப்புகள் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கிடைக்கும்.

    இத்தகவலை ஸ்ரீ பாலாஜி வித்யாபீடம் துணைவேந்தர் பேராசிரியர் கே.ஆர்.சேதுராமன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai