Enable Javscript for better performance
இரும்புப் பொருள்கள் திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வில்லியனூர் அருகே இரும்புப் பொருள்களை திருடி வந்தவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் வீரபத்திரன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது வில்லியனூர் அருகே மங்கலம்-வடமங்கலம் சாலையில் கையில் இரும்பு பொருள்களுடன் வந்த 3 பேரை நிறுத்தி சோதிக்க முயன்றனர்.

    உடனே அவர்கள் கையிலிருந்த பொருள்களுடன் தப்பியோடினர். இதில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தென்னல் பகுதியைச் சேர்ந்த அருண்(28) என்பதும், தப்பியோடிவர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் தொழிற்சாலையிலிருந்து இரும்பு பொருள்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அருணை கைது செய்த போலீஸார், இரும்பு பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai