Enable Javscript for better performance
காரைக்காலில் குடியரசு தின விழா கோலாகலம் - Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காரைக்கால் புறவழிச் சாலையில் உள்ள விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆட்சியர் இ. வல்லவன் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், போலீஸாரின் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவல்துறை சட்டம் ஒழுங்கு, என்.சி.சி. சீனியர் பிரிவில் அண்ணா மற்றும் அவ்வையார் அரசு கல்லூரி மாணவர்களுக்கும், ஜூனியர் பிரிவில் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.

    கூடுதல் ஆட்சியர் எல்.முகம்மது மன்சூர், துணை ஆட்சியர் எஸ். மாணிக்கதீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.பி. பழனிவேலு, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள், வாரியத் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai