Enable Javscript for better performance
யோகாசனப் போட்டிகள் - Dinamani

சுடச்சுட

    

    வில்லியனூர் ஆச்சார்யா சிக்ஷô மந்திர், மற்றும் பிரபஞ்ச யோகாச்சார்யா சங்கம் சார்பில் மாநில யோகாசனப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

    பள்ளித் தாளாளர் ஜெ.அரவிந்தன் தலைமை வகித்தார். ஆச்சார்யா வணிகத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் நிர்மல்குமார் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

    பல்வேறு வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 500 பேர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் புதுவை மத்தியப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை பேராசிரியர் சக்திஞானவேல், ரோட்டர் காஸ்மாஸ் சங்கத் தலைவர் ஆர்.திருவேங்கடம் ஆகியோர் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளித்தனர்.

    பள்ளி முதல்வர் கீதா, பிரபஞ்ச யோகாச்சார்யா சங்கத் தலைவர் கோபிநாத் யோகி உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai