Enable Javscript for better performance
25 சவரன், ரூ.50 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் ஆடிட்டர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 25 சவரன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

    புதுவை ரெயின்போ நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(52). இவர் ஆடிட்டராக உள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னையில் உள்ளஉறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் சென்று

    விட்டனர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை ஊருக்கு திரும்பிய வெங்கடேசன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நகைகள், பணம் கொள்ளை போனது தொடர்பாக பெரியகடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜிந்தா மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai