Enable Javscript for better performance
அதிமுக பிரமுகர் கடைக்கு  தீ வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் தனது கடைக்கு ரௌடி கும்பல் தீ வைத்ததாக அதிமுக பிரமுகர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
     புதுவை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜானிபாய். அதிமுக பிரமுகர். இவர், புதுவை சாரம் சாலை சந்திப்பில் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாகவும், இதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோரிமேடு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் கொடுத்தார்.
     அப்போது அவர் கூறியது: கடந்த சில மாதங்களாக ரௌடிகள் சிலர் எனது மளிகைக் கடைக்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டி வருகின்றனர். போனில் மிரட்டி பணத்தை வசூலித்துச் செல்கின்றனர். இது குறித்து போலீஸில் புகார் கொடுத்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், மீண்டும் ரௌடிகள் போனில் மிரட்டி மாமூல் கேட்பது தொடர்கிறது. நான் இதற்கு மறுத்துவிட்டேன். இந்நிலையில், திங்கள் கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றேன். இரவில் மர்ம நபர்கள் கடைக்கு தீ வைத்துள்ளனர். இது மாமூல் கேட்டு மிரட்டிய ரௌடிகளின் செயல்தான் என்றார்.
     இது குறித்து கோரிமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai