Enable Javscript for better performance
ஆசிரம சகோதரிகளுக்கு இழப்பீடு:  சமூக நல அமைப்புகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரம சகோதரிகளுக்கு இழப்பீடு:  சமூக நல அமைப்புகள் கோரிக்கை

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 12:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரவிந்தர் ஆசிரம சகோதரிகளுக்கு புதுவை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் துணைநிலை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
     புதுச்சேரியிலுள்ள கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங், முதல்வர் ந.ரங்கசாமி, தலைமைச் செயலாளர் சேட்டன் பி சாங்கி, வருவாய்த்துறை செயலர் கந்தவேல், ஆட்சியர் சுந்தரவடிவேலு ஆகியோரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்ப
     தாவது:
     ஆசிரம சகோதரிகள் 9.12.2014 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவர்கள் தங்கியிருந்த ஆசிரம இல்லத்தில் இருந்து கடந்த 17.12.2014 அன்று வெளியேற்றப்பட்டனர்.
     அதன்பின்னர் ஆசிரம சகோதரிகள் ஐந்து பேரும் தங்களின் தாய் தந்தையருடன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
     இதில் இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது தாயார் இறந்துவிட்டனர். எஞ்சிய சகோதரிகள் ஜெயஸ்ரீ, வேதிதா, ஹேம்லதா மற்றும் அவர்களது தந்தையார் பிரசாத் உயிர் தப்பியதோடு, தற்போது மிகுந்த துயரத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
     உச்சநீதிமன்றம் ஐந்து சகோதரிகளையும் ஆசிரம இல்லத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டதே தவிர, அவர்கள் ஆசிரமவாசிகளே இல்லை என்று கூறவில்லை. வேறு எந்த நீதிமன்றமும் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
     ஆசிரம நிர்வாகிகள் சட்டத்துக்குப் புறம்பாக சகோதரிகளையும், அவர்களது தந்தையையும் ஆசிரமத்தில் உள்ள சமாதிக்குச் செல்வதற்கும், அங்குத் தியானம் செய்வதற்கும் மறுத்து வருகின்றனர்.
     உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்து வரும் பொதுநல வழக்கில், ஆசிரம சகோதரிகள் இறந்ததால் ஆசிரமத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
     எனவே, இப்பிரச்னையில் தலையிட்டு ஆசிரம சகோதரிகள், அவர்களது தந்தை ஆகியோரை ஆசிரமத்தில் தங்க வைத்து, உரிய வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
     மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் உள்பட பல்வேறு அமைப்புகள் இம்மனுவை அளித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai