Enable Javscript for better performance
இந்தோ-பிரெஞ்சு திருவிழா இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் நவயுகா கன்சல்டன்சி சார்பில், புதுச்சோ அல்யான்ஸ் பிரான்சேஸ் இந்தோ-பிரெஞ்சு திருவிழாவான பாண்டி பார்டேஜஸ் 2015 புதன்கிழமை தொடங்குகிறது.
     இசை, நடனம், பேச்சு, நாடகம், சினிமா, பொம்மலாட்டம் மற்றும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளாக 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை மொத்தம் 27-நாள்களுக்கு இந் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
     துணை நிலை ஆளுனர் ஏ.கே. சிங் கடற்கரை சாலை சிறுவர் பூங்கா அருகில் உள்ள மேய்சோன் கொலம்பானியில் புதன்கிழமை மாலை 7 மணியளவில் விழாவைத் துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு, பிரான்சு நாட்டு தூதர் பிலிப் ஜான்வியே கமியமா, அந் நாட்டின் முன்னாள் அமைச்சர் மார்டீன் ஹிர்ஸ், எழுத்தாளர் ப்ளோரன்ஸ் நோவில் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
     இந்திய மற்றும் பிரெஞ்சு கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நினைவூட்டும் வகையில் 12 இசை நிகழ்ச்சிகள், 6 திரைப்படங்கள், 4 சொற்பொழிவுகள், நடனம், பாட்டு, நாடகம், பொம்மலாட்டம், புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்ட 27 வகையான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இத்தகவலை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai