Enable Javscript for better performance
இன்று தேசிய இயற்கை முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, புதுவை கல்வித்துறை மாநில பயிற்சி மையம், சிபிஆர் சுற்றுச்சூழல் மையம் சார்பில் தேசிய இயற்கை முகாம் புதுவையில் புதன்கிழமை தொடங்குகிறது.
     இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் ஆகியவை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வகையில் இம் முகாம் நடைபெறுகிறது.
     6 முதல் 8ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர். இவர்களை 3 பகல் மற்றும் 2 இரவுகள் இயற்கையான இடத்தில் தங்க வைத்து பயிற்சி வழங்கப்படும்.
     புதுவையில் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை 5 முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆரோவில் தாவர இயல் பூங்கா மற்றும் ஆரோவில் ஆரன்யா வனம் பகுதியில் நடைபெறும் முகாம்களில் 250 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
     முதல் முகாமை கல்வித்துறை இயக்குநர் ல.குமார் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார். தாவர இயல் பூங்கா இயக்குநர் பவுல் பிளான்ச் பிளவர், சிறப்புப் பணி அலுவலர் வி.ரங்கநாதன், சிபிஆர் மைய உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி கலந்து கொள்கின்றனர்.
     தாவர இயல் பூங்கா, ஆரண்யா வனப்பகுதியில் 28.1.15 முதல் 30.1.15 வரை முதல் 2 முகாம்களும், 3.2.15 முதல் 5.2.15 வரை அடுத்த 2 முகாம்களும் நடக்கிறது.
     கடைசி முகாம் 5.2.15 முதல் 7.2.15 வரை தாவர இயல் பூங்காவில் நடக்கிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai