Enable Javscript for better performance
எஸ்.ஐ., 19 காவலர்கள் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி காவல்துறையில் எஸ்.ஐ., 19 காவலர்களை பணியிட மாற்றம் செய்து ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
     இதுதொடர்பாக தலைமையிட எஸ்.பி. ஐஆர்சி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலைய எஸ்.ஐ. ரமேஷ், புதுச்சேரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     19 காவலர்கள் மாற்றம்: நிலை-1 உதவி எஸ்.ஐ. அல்போன்ஸ் காளிங்கராயர் ஏனாமிலிருந்து புதுச்சேரி காவல் தேர்வு வாரியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
     தலைமைக் காவலர்கள்: கே.ராமமூர்த்தி, அரியாங்குப்பத்திலிருந்து புதுவை சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும், ஆர்.குணசேகரன் நெட்டப்பாக்கத்தில் இருந்து புதுவை கலால் துறைக்கும், என்.ஷாஜஹான் கலால் துறையில் இருந்து அரியாங்குப்பத்துக்கும், ஜி.சகாயராஜ் திருநள்ளாறில் இருந்து காரைக்கால் ஆயுதப்படை பிரிவுக்கும், கே.பி. விஜயன் உருளையன்பேட்டையில் இருந்து புதுச்சேரி ஆயுதப்படை பிரிவுக்கும், ஆர். ஸ்ரீதரன் லாஸ்பேட்டையில் இருந்து சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும், எஸ்.பாஸ்கரன் உருளையன்பேட்டையில் இருந்து சிக்மா பாதுகாப்பு பிரிவுக்கும், எம்.மணி கிருமாம்பாக்கத்திலிருந்து உருளையன்பேட்டைக்கும், அன்பழகன் அருணன் கிருமாம்பாக்கத்திலிருந்து நெட்டப்பாக்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
     சிறப்பு நிலை தலைமைக் காவலர்கள்: ஜே.கிருஷ்ணசாமி நெட்டப் பாக்கத்திலிருந்து உருளையன்பேட்டைக்கும், வி.ஈஸ்வரமூர்த்தி டி.நகரில் இருந்து காரைக்கால் கடலோர காவல் பிரிவுக்கும், வி.சாந்தி, வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அரியாங்குப்பம் கிராமப்புற போக்குவரத்துக்கும், வி.சுப்பாராவ் புதுச்சேரி ஆயுதப்டையில் இருந்து ஏனாம் ஆயுதப்படைக்கும், என்.அசோகன் வடக்கு போக்குவரத்து பிரிவில் இருந்து டி.நகருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
     மகளிர் காவலர் வி.தருமாம்பாள் வடக்கு அனைத்து மகளிர் போலீஸில் இருந்து புதுவை ஆயுதப்படைக்கும், காவலர்கள் வி.கண்ணன் கிருமாம்பாக்கத்தில் இருந்து அரசு அச்சகத்துக்கும், ஆர்.வெங்கட்ராமன் திருநள்ளாரில் இருந்து கிருமாம்பாக்கத்துக்கும், ஆர்.மோகன்ராஜ் திருக்கனூரிலிருந்து புதுச்சேரிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai