Enable Javscript for better performance
ஏஐடியுசி  ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பான்லே நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணி முடித்த 330 தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     புதுவையிலுள்ள பான்லே நிறுவன ஊழியர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் இந்த நிறுவனம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் காசிவீரப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தன்ராஜ் முன்னிலை வகித்தார்.
     ஏஐடியூசி பொதுச்செயலாளர் அபிஷேகம், துணை பொதுச் செயலாளர் தினேஷ் பொன்னையா, துணைத் தலைவர் கலியபெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர் வீரமுருகையன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai