Enable Javscript for better performance
கதர் வாரிய அலுவலகத்தில்  குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    கதர் வாரிய அலுவலகத்தில்  குடியரசு தின விழா

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 12:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய அலுவலகத்தில் குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     காமராஜர் சாலையில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைமைச் செயல் அலுவலர் பி.மாலதி கலிவரதன் தேசியக் கொடியேற்றினார்.
     வாரியத் தலைவர் எம்.ராஜேஷ், தலைமை கணக்கு அதிகாரி கே. ராதாகிருஷ்ணன், துணை தலைமைச் செயல் அலுவலர் ஜி.கணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     மணவெளி கட்டபொம்மன் இளைஞர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சங்கத் தலைவர் எம்.பக்தவத்சலம் தேசியக் கொடியேற்றினார்.
     அங்கன்வாடி ஊழியர்கள் அன்னலட்சுமி, விஜயலட்சுமி, ஆனந்த், முகுந்தன், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai