Enable Javscript for better performance
கல்லூரியில்  வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி கலித்தீர்த்தாள்குப்பம் ஸ்ரீ மணக்குளவிநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     வீ டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் அதன் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கோகுலகண்ணன், ரமேஷ், மேலாளர் வில்பரெட் சாமுவேல், ஆகியோர் நிறுவனத்தின் விவரங்கள், வேலைவாய்ப்பு வசதிகள், ஊதியம், எதிர்கால குறிக்கோள்கள் குறித்து விவரித்தனர்.
     கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன் முன்னிலை வகித்தார். முதல்வர் எஸ்.மலர்க்கண் முகாமைத் தொடங்கி வைத்தார்.
     மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மயிலம் பொறியியல் கல்லூரி, ஐஎப்இடி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில் 50 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
     வேலைவாய்ப்புத்துறை அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai