Enable Javscript for better performance
கவிதைப் போட்டிக்கு  படைப்புகள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவை படைப்பாளர் இயக்கத்தின் பொன்விழாவையொட்டி கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து நிறுவனர் ஆறு செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை படைப்பாளர் இயக்கம், தனது 50வது பொன்விழாவை பிப்ரவரி மாதத்தில் கொண்டாடுகிறது. இதனையொட்டி, கவிதைப் போட்டிகளை அறிவித்துள்ளது.
     பொன்விழா நிகழ்வு காணும் புதுவை படைப்பாளர் இயக்கம், என்ற தலைப்பில் மரபுக் கவிதைகள் 16 அடிகள் அல்லது புதுக்கவிதை 60 சொற்களில் அமைய வேண்டும். படைப்புகள் எழுதும் தாளில் முகவரியை எழுத வேண்டாம். தனித்தாளில் முகவரி எழுதி அனுப்ப வேண்டும்.
     படைப்புகளை, பாவலர், ஆறு செல்வன், நிறுவனர், புதுவை படைப்பாளர் இயக்கம், எண்.4, காமராஜர் வீதி, விபிசிங் நகர், சண்முகாபுரம், புதுவை. என்ற முகவரிக்கு, வரும் பிப்.7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
     இதற்கான பரிசளிப்பு விழா, பிப்.15 ஆம் தேதி புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை 98947 55985 என்ற செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai