Enable Javscript for better performance
குறளிசைக்கூடு இலக்கிய விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுவை குறளிசைக்கூடு இலக்கிய மன்றத்தின் இலக்கிய நிகழ்ச்சி செல்லப்பெருமாள்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.
     தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். பாவலர் ஆதிராமன் வரவேற்றார். பொருளாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மதிப்பியல் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கிப் பேசினார்.
     பதிணென்கீழ்கணக்கில் புறத்தினை யொழுக்கும் என்ற தலைப்பில், பேராசிரியர் இளமதி ஜானகிராமன் சிறப்புரையாற்றினார். இலக்கணக்காட்சி என்ற தலைப்பில் நிறுவனர் சொக்கலிங்கம் பேசினார்.
     பொங்கிடுவோம் என்ற தலைப்பில் பாவலர்கள் மணிமேகலை குப்புசாமி, பாலன், பைரவி, ஹேமலதா, ஜெயராமன், சிவாஜி, வாலி, அணங்கன் உள்ளிட்டோர் கவிதை பாடினர். அறிவு நம்பி முருகசாமி, பார்த்திபன் ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai