Enable Javscript for better performance
தனியார் வாடகைக் கார்களை அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது:  பா.ஜ.க. வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் வாடகைக் கார்களை அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது:  பா.ஜ.க. வலியுறுத்தல்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் வாடகைக் கார்களை அரசு அதிகாரிகள் பயன்படுத்தக் கூடாது என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
     பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆர்.வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
     புதுவையில் அரசு அதிகாரிகள், வாரியத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு கார்களால் ஆண்டுக்கு ரூ.4 கோடி அளவுக்கு வாடகையாகவும், மேலும் பல கோடி எரிபொருள் செலவும் ஆகிறது.
     மோடி பிரதமர் ஆனது முதல் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ஆனால் புதுவையில் அனைத்து துறைகளிலும் போதிய கார்கள் இருந்தும் உயரதிகாரிகள், வாரியத் தலைவர்கள் 50-க்கு மேற்பட்ட சொகுசு கார்களை தனியாரிடம் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர். விடுமுறை நாள்களில் அரசு அதிகாரிகள் சொந்தக் கார்களையே பயன்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான வாகனப் பணிமனை இருந்தும், தனியார் பணிமனைகளில் வாகனங்கள் பழுது பார்க்கப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.
     பயனற்ற அரசு வாகனங்களை டெண்டர் விட்டு விற்பனை செய்ய வேண்டும். அரசிடம் தற்போது உள்ள 200-க்கு மேற்பட்ட நல்ல வாகனங்களை பழுதுபார்த்து இயக்கி வாடகை செலவினத்தை தவிர்க்க வேண்டும். புதுவை சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மூலம் அவற்றை இயக்க வேண்டும்.
     புதுவையில் நிதி நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது. துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர் எத்துறைகளில் நிதி விரயமாகிறது என்பதைக் கண்டறிந்து உடனே தடுக்க வேண்டும். நிதி நிலையைக் கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் சுவாமிநாதன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai