Enable Javscript for better performance
தனி மாநில அந்தஸ்து விவகாரம்:  மத்திய, மாநில அரசுகளுக்கு  புதுவை காங்கிரஸ் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    தனி மாநில அந்தஸ்து விவகாரம்:  மத்திய, மாநில அரசுகளுக்கு  புதுவை காங்கிரஸ் கண்டனம்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 11:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனி மாநில அந்தஸ்து தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் புதுவை மக்களை ஏமாற்றி வருகின்றன என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து மாநில செய்தித் தொடர்பாளர் ஏவி.வீரராகவன் வெளியிட்ட அறிக்கை:
     புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தரும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். பலமுறை இக்கோரிக்கை தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு இப்பிரச்னையில் மெüனமாக உள்ளது என புகார் கூறி உள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பா.ஜ.க.வும், என்.ஆர். காங்கிரஸýம் கூட்டணி சேர்ந்து, மோடி பிரதமர் ஆனதும் தனி மாநில அந்தஸ்து தந்து விடுவார் என பிரசாரம் செய்தனர். நிதி நெருக்கடி உள்பட அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விடும் எனத் தெரிவித்தனர். பா.ஜ.க. மேலிட நிர்வாகிகளும் இதுகுறித்து வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது முதல்வர் மத்திய அரசு மீது புகார் கூறியுள்ளார். மாநில அந்தஸ்து கிடைக்கும் என நினைத்து அக்கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களித்தனர். இதற்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. என்ன பதில் கூறப்போகிறார்? என்றார் வீரராகவன்.
     நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு
     தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தல்
     புதுச்சேரி, ஜன. 27: புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
     அவர் வெளியிட்ட அறிக்கை: மாநில அந்தஸ்து பிரச்னை தொடர்பாக முதல்வர் ரங்கசாமி இனிமேலாவது நிலையான, முறையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். நிபுணர் குழு மூலம் மாநில அந்தஸ்து தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும். பொருளாதாரம், நிதி, மத்திய, மாநில உறவுகள், அரசியல் நிர்வாக காரணங்கள் அடிப்படையில் அறிக்கை அமைய வேண்டும்.
     தலைமைச் செயலாளர் தலைமையில் செயலர்கள் குழுவை அமைத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசி, சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தில்லிக்குச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற குழுத் தலைவர்களை சந்திக்க வேண்டும்.
     ஒருமித்த கருத்தை உருவாக்கினால் தான் தேசிய அளவில் மாநில அந்தஸ்து குறித்து விழிப்புணர்வு ஏற்படும். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.இரு எம்.பிக்களும் தில்லி சென்று மத்திய அரசை அணுக வேண்டும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தில்லிக்கு மாநில அந்தஸ்து தரும்போது தான் புதுவைக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.அதுவரை புதுவை அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai