Enable Javscript for better performance
தூய்மைப் பணி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை பெவிக்கால் சாம்பியன்ஸ் கிளப் சார்பில் தூய்மை சுகாதாரம் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் தூய்மைப் பணி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     புதுவை முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பெவிக்கால் சாம்பியன்ஸ் கிளப் தென் மண்டல அமைப்பாளர் முத்துராமன் தொடங்கி வைத்தார். கல்வித் துறை இணை இயக்குநர் பார்த்தசாரதி பேசினார். கிளப் உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த பத்மநாபன், சிவகுருநாதன், ஆனந்தன், முத்துக்கிருஷ்ணன், நடராஜன், பெருமாள், ஞானவேல் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற் கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai