Enable Javscript for better performance
பெண்கள் பள்ளியில் தற்காப்பு கலைப் பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    பெண்கள் பள்ளியில் தற்காப்பு கலைப் பயிற்சி

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 12:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை காலாப்பட்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
     பள்ளியில் நடைபெற்ற மாணவிகளுக்கான தற்காப்பு கலைப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பள்ளித் துணை முதல்வர் சிவஞானம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உடற் கல்வி ஆசிரியர் சங்கர் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் ராஜகோபால் சிறப்புரையாற்றினார். மாநில கராத்தே சங்க பொதுச் செயலர் ஞானசேகரன், பயிற்சியாளர்கள் குமரன், ஷமிதாகாந்தி ஆகியோர், தற்காப்பு கலைப் பயிற்சியின் அவசியம் குறித்துப் பேசினர்.
     தொடர்ந்து பள்ளியில் உள்ள 8ஆம் வகுப்பு மாணவிகளுக்கு, கராத்தே பயிற்சியளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai