Enable Javscript for better performance
மகளிர் மேம்பாட்டு அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு அறிவித்தபடி ரூ.600 வழங்காததைக் கண்டித்து, புதுச்சேரி மகளிர் மேம்பாட்டுத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
     அரசு மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த ஆண்டு துணிகளுக்குப் பதிலாக ரூ.600 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதன்படி அங்கன்வாடிகள் மூலம் பயனாளிகளுக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது.
     காமராஜர் நகர் தொகுதிக்கு உள்பட்ட ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த 400 சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இத் தொகை வழங்கப்படவில்லையாம்.
     இவர்கள் தொகுதி எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான வைத்திலிங்கத்திடம் முறையிட்டனர். இதையடுத்து வைத்திலிங்கம் தலைமையில் பொதுமக்கள், சாரம் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
     அங்கு இயக்குநர் மீனாகுமாரியை சந்தித்து வைத்திலிங்கம் முறையிட்டார். இயக்குநர் கூறுகையில், பயனாளிகளுக்கு தொகை வழங்குவதில் விடுபட்டது எப்படி என்று தெரியவில்லை. உடனே ரொக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai