Enable Javscript for better performance
மார்ச் மாதம் முழு நிதிநிலை  அறிக்கை: அரசு திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் மாதம் முழு நிதிநிலை  அறிக்கை: அரசு திட்டம்

    By  புதுச்சேரி,  |   Published on : 28th January 2015 12:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடப்பு 2015-16ஆம் ஆண்டில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய புதுவை மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
     கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசு சார்பில் மார்ச் மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே பேரவையில் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இதற்கு மாறாக வரும் மார்ச் மாதம் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
     தலைமைச் செயலர் பதவிக்காலம் நீட்டிப்பு:
     தற்போதைய தலைமைச் செயலாளர் சேட்டன் பூ சாங்கியை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் புதுச்சேரி மாநில நிர்வாகம் குறித்து
     சாங்கி முழுமையாக அறிந்தவர் என்பதால், அவரை வரும் மார்ச் மாதம் வரை பதவியில் நீடிக்குமாறு முதல்வர் ரங்கசாமி மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
     புதிய தலைமைச் செயலர் பதவியேற்று, நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் முதல்வரின் பரிந்துரையின்படி சாங்கியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
     மேலும் புதிய தலைமைச் செயலராக யாரை நியமிப்பது என மத்திய உள்துறை அமைச்சகம் 4 பெயர்கள் பட்டியலை முதல்வருக்கு அனுப்பி இருந்தது. அதில் ஒருவரை முதல்வர் பரிந்துரை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
     நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.
     ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில் மொத்த பட்ஜெட் தொகை ரூ.6100 கோடி என மதிப்பிடப்பட்டது. இத்திட்ட மதிப்பீடு ரூ.5822 கோடியாக குறைந்து விட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai