Enable Javscript for better performance
விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவை நேரு யுவகேந்திரா மற்றும் கொம்பாக்கம்பேட் விளையாட்டு மற்றும் கலாசார மையம் சார்பில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
     கொம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், கைப்பந்து, கபடி, ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்டப் போட்டிகள் நடைபெற்றன.
     இதில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இதன் பரிசளிப்பு விழாவுக்கு கொம்பாக்கம் விளையாட்டு மையத்தின் செயலர் செல்வராஜ் வரவேற்றார். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சேஷாத்திரி தலைமை வகித்தார்.
     போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகையன், விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பு அதிகாரி முத்துகேசவலு, மெடிமிக்ஸ் நிறுவன மேலாளர் லூக்காஸ், வழக்குரைஞர் வீரசெல்வம் ஆகியோர் பேசினர்.
     விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
     நல்லாசிரியர் விருதுபெற்ற அமலோற், குடியரசுத் தலைவர் விருதுபெற்ற மிருதங்க வித்வான் ஜெனார்த்தனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காஸ்கோ மன்றத் தலைவர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai