Enable Javscript for better performance
\\\"அம்பேத்கரின் கொள்கைகளை மறந்து பாஜக அரசு செயல்படுகிறது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அம்பேத்கரின் கொள்கைகளை மறந்து பாஜக அரசு செயல்படுகிறது'

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்பேத்கரின் கொள்கைகளை மறந்து மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் என குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு, மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய பொதுச் செயலர் வி.நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், கே.லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர்கள் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், ராமசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், ஆர்.கே.அனந்தராமன், உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது மாநிலத் தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டை மதவாத அடிப்படையில் துண்டாட முயன்று வருகிறது. புதுவை மாநில அரசு ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறு நிதியை வேறு திட்டங்களுக்கு திருப்பி விட்டு செலவழித்து வருகிறது.

    முதல்வர் ரங்கசாமி ஆட்சியை அகற்றி, மீண்டும் புதுவையில் காங்கிரஸ் அரசு அமைய அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் புதுவையில் மக்கள் நலத் திட்டங்கள் செம்மையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே மக்களிடம் உள்ள ஏக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் முறையாக பயன்படுத்தி, கருத்து வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும். என்.ஆர். காங்கிரசை வீழ்த்த திமுக, மமக, முஸ்லீம் லீக் போன்றவை காங்கிரசுடன் கைகோர்த்துள்ளன என்றார் நமச்சிவாயம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai