Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் 126-வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

     முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வி.சபாபதி ஆகியோர் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ராஜவேலு, தியாகாரஜன், பன்னீர்செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவர் டி.பி.ஆர்.செல்வம், ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

    திமுக: புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் நிர்வாகிகள் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பாரதி பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, அமுதாகுமார், பொருளாளர் குமரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன்,  முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, டாக்டர் மாயக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், தட்சிணாமூர்த்தி, வேலவன் பங்கேற்றனர்.

     வடக்கு மாநில திமுக: இதேபோல் புதுச்சேரி வடக்கு மாநில திமுக சார்பில் செஞ்சி சாலையில் உள்ள வடக்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு புஸ்ஸி வீதி வழியாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

    முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.திருநாவுக்கரசு, மாநில அவைத் தலைவர் ஆர்.பலராமன், துணை அமைப்பாளர்கள், ஏ.கே.குமார் (எ) கிருஷ்ணன், பெல்லாரி (எ) கலியபெருமாள், சுந்தரி அல்லிமுத்து  பொருளாளர் எஸ்.செந்தில்குமார் பங்கேற்றனர்.

    அதிமுக: அதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தேர்தல் பிரிவுச் செயலர் பி.கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஆ.அன்பழகன், எல்.பெரியசாமி, ஆ.பாஸ்கர், அவைத் தலைவர் எம்.பாண்டுரங்கன், நகர செயலர்கள் ரவீந்திரன், அன்பானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன் தலைமையில், நிர்வாகிகள் நாரா.கலைநாதன், கே.முருகன், வி.எஸ்.அபிஷேகம், தினேஷ் பொன்னையா, வேகு.நிலவழகன், சலீம் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

     தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொகுதி நிர்வாகிகள் பி.முருகன், ஆர்.செல்வம், பி.தனஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிர்வாகிகள் வெ.பெருமாள், சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ராமசாமி ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    தேமுதிக: புதுவை மாநில தேமுதிக சார்பில் மாநில பொறுப்பாளர்கள் ஆர்.செல்வராஜ்,ஆர்.வி.அசோக்பாபு தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாககள் புகழேந்தி, சுப்பிரமணியன், ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் த.கண்ணதாசன், இளங்கோவன், செல்வராசு, தமிழக்குமரன், கெளரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் புதுச்சேரி பீம்சேனா சார்பில் மாநிலத் தலைவர் எஸ்.அரிகிருஷ்ணன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் ஏ.கலியமூர்த்தி, ஆர்.வெங்கடசாமி, ஏ.நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை சார்பில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் ஆ.பாவாடைராயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் செ.அன்பு, இரா.சிவபாலன், சு.செல்வபாண்டியன், பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai