Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள்- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மீன்வளத் துறை அமைச்சர் பி.ஆர்.சிவா, நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வேட்பாளருமான வி.எம்.சி.சிவக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.என்.திருமுருகன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி பிரதேச முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்டத் தலைவர் அ.பாஸ்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    அதிமுக மாவட்டச் செயலரும் வடக்குத் தொகுதி வேட்பாளருமான எம்.வி.ஓமலிங்கம், தெற்குத் தொகுதி வேட்பாளர் கே.ஏ.யு.அசனா, திருள்ளாறு தொகுதி வேட்பாளர் ஜி.முருகையன், நெடுங்காடு தொகுதி வேட்பாளர் ஜி.பன்னீர்செல்வம் ஆகியோரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மதிமுக மாவட்டச் செயலர் சோ.அம்பலவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பொன்.செந்தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்டச் செயலர் என்.எம்.கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.தமிழழகன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.

    காரைக்கால் நகர தலித் மற்றும் பழங்குடி மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கலியமூர்த்தி, மனோகர் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலை முன்பாக தலித் சமுதாய மேம்பாட்டுக்கு உறுதிமொழி ஏற்றனர். மேலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு தலைவர் எம்.நாகப்பன், கௌரவத் தலைவர் கே.ஆர்.பக்கிரிசாமி, அம்பேத்கர் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை, காரைக்கால் சமாதானக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai