Enable Javscript for better performance
வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் இந்திய கடலோரக் காவல் படை தளத்தை அமைக்கக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் இந்திய கடலோரக் காவல் படை தளத்தை அமைக்கக் கூடாது

    By dn  |   Published on : 15th April 2016 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையின் புறநகர்ப் பகுதியாக விளங்கும் அரியாங்குப்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது சுற்றுலாத் தலங்களை கொண்ட பகுதியாகவும் உள்ளது. முறையான குப்பைகள் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மேலும் புதை சாக்கடை திட்டமும் முழுமையாக இல்லை.

    முருங்கப்பாக்கத்தில் பல புதிய நகர் பகுதிகளுக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை வசதி செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

    சண்முகா நகர் மக்கள் பாதிப்பு: அகல ரயில்பாதை பணிக்காக, முதலியார்பேட்டை ரயில் பாதை அருகில் வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலி செய்யப்பட்டு அரியாங்குப்பம் சண்முகா நகரில் குடியமர்த்தப்பட்டனர். தற்போது, சண்முகா நகரில் பள்ளமான பகுதிக்கு மண் கொட்டும் பணி மட்டும் நடக்கிறது. இப்பகுதி குடிசைகள் கல்வீடாக கட்ட முன்னுரிமை அளிக்கவில்லை என்ற புகார் உள்ளது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு மழைக் காலத்தில் சண்முகா நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தனர். இப்பிரச்னைக்கு நீண்டகால தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் கோரிக்கையாகும்.

    அரிக்கன்மேடு நினைவுச் சின்னம்: புதுச்சேரியில் ரோமானியர்கள் வணிகம் செய்தனர் என்பதற்கான ஆதாரமாக விளங்கும், அரிக்கன்மேடு வரலாற்று இடம் மேம்படுத்தப்படாமல் அதன் தடம் தெரியாமல் அழிந்து வருகிறது. அப்பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்தவும், தகாத செயல்கள் புரியும் இடமாகவும் மாறி வருகிறது. இதேபோல் வீராம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் இந்திய கடலோரக் காவல் படை தளத்தை அமைக்கக் கூடாது என அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai