Enable Javscript for better performance
ஏனாம் பிராந்திய நிர்வாகி ஆட்சியருடன் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    ஏனாம் பிராந்திய நிர்வாகி ஆட்சியருடன் ஆலோசனை

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்டப்பேரவைத் தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியருடன், ஏனாம் பிராந்திய நிர்வாகி ஆர்.பார்த்திபன்  வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

     புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டதை ஒட்டி உள்ளது. வரும் மே 16-ஆம் தேதி ஏனாம் சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த பிராந்திய நிர்வாகி பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஆட்சியருடன் சந்திப்பு: இதன் ஒரு கட்டமாக கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் அருண்குமாரை காக்கிநாடாவில் வியாழக்கிழமை சந்தித்தார். கிழக்கு கோதாவரி மாவட்ட எல்லைக்குள், ஏனாமைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கட்சிக் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது, மேலும் மே 14, 15, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஏனாம் எல்லைப் பகுதிகளில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும்.  கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலால், வருவாய், காவல்துறை குழுவினரை போலவரம், கரப்பா, மும்மிடிவரம், தல்லவெறு மண்டலங்களில் இணைந்து செயல்படச் செய்ய வேண்டும் என பார்த்திபன் கேட்டுக் கொண்டார்.  இதற்கு பதிலளித்த ஆட்சியர் அருண்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai