Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

     மன்மத ஆண்டு நிறைவு பெற்று துர்முகி ஆண்டு பிறந்துள்ளது.

    ஹயக்ரீவரின் மகள் துர்முகி ஆவார். துர்முக என்றால் குதிரை என்ற பொருளாகும். இப்புத்தாண்டு முழுதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது.

    துர்முகி ஆண்டு முழுவதும் ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்கு துணையிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

     இதை முன்னிட்டு, புதுச்சேரி மணக்குள விநாயகர்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன.

    புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

     மகாத்மா காந்தி வீதியில் உள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதேபோல் ஈஸ்வரன் கோயில், காமாட்சியம்மன் கோயில், லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர் கோயில், முதலியார்பேட்டை வன்னியப்பெருமாள் கோயில், காலாப்பட்டு சீரடி சாய்பாபா, கதிர்காமம் கதிர்வேல் சுவாமிகள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    வில்லியனூர், பாகூர்: இதேபோல் வில்லியனூரில்  திருக்காமீசுவரர் கோயில், பாகூர் மூலநாத சுவாமி கோயில், திருக்காஞ்சி கெங்கவராகநதீஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்: இதேபோல் புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில், மொரட்டாண்டி பிரதியங்கிரா தேவி காளிகோயில் ஆகிய இடங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai