Enable Javscript for better performance
திமுக - காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் ஒரிரு நாளில் அறிவிப்பு: நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

    

    திமுக - காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் ஒரிரு நாளில் அறிவிப்பு: நாராயணசாமி

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை  நடத்தி ஒரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என தேசிய பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தேசிய பொதுச் செயலர் வி.நாராயணசாமி பேசியதாவது: பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மாநிலத் தலைவர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், நான் உள்ளிட்டோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

     புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகள், திமுகவுக்கு 9 தொகுதிகள் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். யார் யாருக்கு எந்த தொகுதிகள் என இரு கட்சிக் குழுவினர் ஒரிரு நாள்களில் பேசி அறிவிக்கப்படும்.

    புதுவை அரசு விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.   மத்திய அரசு கடந்த ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்துக்கு ரூ.50 கோடி மட்டுமே வழங்கியது. அதையும் மாநில அரசின் திட்ட செலவுகளிலேயே எடுத்து செலவிடுமாறு கூறி விட்டது. இதனால் புதுவை மேலும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. தேர்தல் வாக்குறுதியாக இலவச அரிசி 25 கிலோ போடப்படும் என அறிவித்தார். ஆனால் அத்திட்டத்தில் 10 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. சென்டாக் கல்வி நிதி மாணவர்களுக்கு காலத்தோடு தரப்படுவதில்லை. ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி இரண்டாயிரம் பேருக்கு வேலை தருவதாக கூறினர். ஆனால் அதற்கு மாறாக மூடுவிழா நடத்தி விட்டனர்.   வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க சூளுரை ஏற்க வேண்டும் என்றார் நாராயணசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai