Enable Javscript for better performance
தெறி படம் வெளியீடு: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி- Dinamani

சுடச்சுட

    

    தெறி படம் வெளியீடு: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடிகர் விஜய் படமான தெறி வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் கூட்டத்தை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

     நடிகர் விஜய்யின் 59-வது படம் தெறி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. முக்கிய நடிகர்கள் படங்கள் வெளிவரும் போது அவர்களது ரசிகர்கள் முந்தைய இரவே திரையரங்குகளின் முன்பு குவிந்து விடுவர்.

     புதுச்சேரியில் ஒரு படம் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்படுவது வழக்கம். லிங்கா படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் நெரிசலின்றி படத்தைப் பார்த்தனர்.   ஆனால் தற்போது விஜய் படம் காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் அத்திரையரங்கு முன் புதன்கிழமை இரவு 11 மணிக்கு கூடி விட்டனர்.

    ஆனால் அப்போது படப்பெட்டி வரவில்லை என  திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. படத்துக்கான டிக்கெட்டுகளை இணையதளத்திலும் விற்கவில்லையாம்.

     இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென 6 மணிக்கு படப்பெட்டி வந்து விட்டது எனக்கூறி படம் திரையிடப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் கும்பலாக நுழைய முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் கூட்டம் ஒரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai