Enable Javscript for better performance
தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைக்கும்படி மீனவக் கிராமத்தினருக்கு காவல் துறை வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைக்கும்படி மீனவக் கிராமத்தினருக்கு காவல் துறை வேண்டுகோள்

    By காரைக்கால்  |   Published on : 15th April 2016 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் அமைதியாக நடைபெற கடலோர மீனவக் கிராமத்தினர் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென மண்டல காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.குணசேகரன் தலைமையில், கடலோர மீனவக் கிராமப் பஞ்சாயத்தார்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்கக் கூட்டம், கோட்டுச்சேரி காவல்நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.குணசேகரன் பேசியது:

    புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, தேர்தல் துறையினரும், காவல் துறையினரும் உரிய கண்காணிப்பு, சோதனைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

    மீன்பிடித் தடைக்காலம் தொடங்குகிறது. ஏறக்குறைய 47 நாள்கள் தடைக்காலம் அமலில் உள்ளபோது, கடல் பகுதியில் படகுகள் போக்குவரத்து இருக்காது. இந்தநிலையில், அறிமுகம் இல்லாதோர் கடல் வழியே ஊடுருவிடாமல் இருக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருப்பர். போலீஸாருக்கு அந்தந்த கிராம மீனவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். புகார்தாரர் குறித்த தகவல் யாருக்கும் தெரிவிக்கப்படாது. கடத்தல் போன்ற தவறான செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற கடலோரக் கிராம மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில் காவல் ஆய்வாளர் மரியகிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளர் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai