Enable Javscript for better performance
தேர்தல் விதி மீறல்: சாராய கடைக்கு உரிமம் ரத்து, சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விதி மீறல்: சாராய கடைக்கு உரிமம் ரத்து, சீல் வைப்பு

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் தேர்தல் விதிகளை மீறி சாராயம் விற்பனை செய்த கடைக்கு கலால்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர். உரிமம் ரத்து செய்யப்பட்டு மேலும் அங்கிருந்த 900 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

     வரும் மே 16-ஆம் தேதி புதுச்சேரியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை கலால்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. சாராய, மதுக்கடைகளில் விற்பனை, இருப்பு பதிவேடுகளை சரியாக பராமரிக்க வேண்டும். நாள்தோறும் இருப்பு, விற்பனை விவரங்களை கலால்

    துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

     ஒருவருக்கு சாராயம் 4.5 லிட்டரும், பீர் 9.5 லிட்டர் மட்டுமே விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

     தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மது விநியோகிப்பதை தடுக்கும் பொருட்டு கலால்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீறுபவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

     இந்நிலையில் புதன்கிழமை இரவு திருக்கனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கேனில் 70 லிட்டர் சாராயம் கடத்தி சென்ற கிருமாம்பாக்கத்தை சேர்ந்த அருள் என்ற அருள்தாஸை திருக்கனூர் போலீஸார் கைது செய்தனர்.

     இதுகுறித்து கலால்துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

     துணை ஆணையர் ஆபெல் ரொசோரியோ உத்தரவின் படி  அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சாராயம் விற்பனை செய்தமைக்காக நரம்பை சாராயக் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. கலால்துறை வட்டாட்சியர் குமார் அக்கடைக்கு சீல் வைத்தார்.

     அந்த சாராயக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 900 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai