Enable Javscript for better performance
தொகுதி அறிமுகம்: புதுச்சேரி-அரியாங்குப்பம்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக அரியாங்குப்பம் விளங்கி வருகிறது. பல்வேறு முக்கியத் தலைவர்கள் இத்தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தொகுதி மறுசீரமைப்பில் முதலியார்பேட்டையில் இருந்த முருங்கப்பாக்கம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அரியாங்குப்பம் தொகுதியில் சேர்க்கப்பட்டது.

     

     

    தொகுதி எல்லைகள்

    முதலியார்பேட்டை, மணவெளி தொகுதிகளையும், வங்காள விரிகுடா கடலையும் அரியாங்குப்பம் தனது எல்லைகளாக கொண்டுள்ளது.

    புதுச்சேரி நகராட்சியின் 39, 41-வது வார்டுகள், மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, காக்காயன்தோப்பு, பெரிய வீராம்பட்டினம் போன்றவை இதில் அடங்கி உள்ளன.

    ரோமானியர்கள் பண்டைக் காலத்தில் வணிகம் செய்தனர் என்பதற்கு சான்றாக விளங்கும் அரிக்கன்மேடு தொல்லியல் சின்னங்கள், பாரதியார் பல்கலைக்கூடம், முருங்கப்பாக்கம் கைவினை கலைஞர்கள் கிராமம் போன்றவை இத்தொகுதியின் அடையாளங்களாகும்.

     

     

    மொத்த வாக்காளர்கள்

    ஆண்கள் 16,857

    பெண்கள் 18,556

    மூன்றாம் பாலினம் 11.

    மொத்த வாக்காளர்கள் 35,424.

     

    வாக்குச் சாவடிகள்

    வாக்குச் சாவடிகள் 36.

    கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.சபாபதி வெற்றி பெற்றார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராகவும் உள்ளார்.

     

     

    இதுவரை வென்றவர்கள்

    1964 பி.ரத்தினவேலு (காங்.).

    1969 எஸ்.பெருமாள் (திமுக).

    1974 பி.சி.புருஷோத்தமன் (காங்.).

    1977 பி.சுப்பராயன் (திமுக).

    1980 பி.சுப்பராயன் (திமுக).

    1985 பு.புருஷோத்தமன் (அதிமுக).

    1990 ஏ.பக்தவத்சலம் ஜனதா தளம்).

    1991 பி.சுப்பராயன் (திமுக).

    1996 எஸ்.ராம்சிங் (பாமக).

    2001 டி.ஜெயமூர்த்தி (சுயே).

    2006 ஆர்.கே.அனந்தரான் (பாமக).

    2011 வி.சபாபதி (என்.ஆர்.காங்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai