Enable Javscript for better performance
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வுக்கு வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வுக்கு வலியுறுத்தல்

    By காரைக்கால்  |   Published on : 15th April 2016 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அதை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என காரைக்காலில் நடைபெற்ற உலக சுகாதார தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

    காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் செயல்படும் அன்னை தெரஸா பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி சுகாதார கல்வி நிறுவனத்தில் செவிலியக் கல்வி மற்றும் ஆய்வகக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் உலக சுகாதார தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி.உதயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர்.

    உலக சுகாதார தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்தும், மருத்துவக் கல்வி பயிலும் மாணவ- மாணவியரின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் மருத்துவ அதிகாரிகள் பேசினர்.

    மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பி.உதயக்குமார் பேசும்போது, மருத்துவத் துறையில் உள்ளவர்கள் பொதுமக்களிடையே நோய்கள் எவ்வாறு பரவுகிறது, அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தற்போது பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10-இல் ஒருவருக்கு சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது.

    உணவு கட்டுப்பாடும், உடற் பயிற்சிகளும் பாதிப்பு வராமலும், வந்தால் கட்டுப்பாட்டில் இருக்கவும் உதவுகிறது என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும்.

    குறிப்பாக இந்த நோய் பாதித்தவர்கள், அரிசி உணவை தவிர்த்து, கோதுமை போன்ற உணவு வகைக்கு மாறவேண்டும். நடைப் பயிற்சி உள்ளிட்ட உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

    இந்நோய் தொடர்பாக, அரசு மருத்துவமனையில் சோதனைகள், சிகிச்சையளிக்கப்படுவதை பொதுமக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

    அரசு மருத்துவமனை ஆய்வக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.அமுதவேல், தலைமை மருத்துவர் விஜயகுமார், மதன்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அன்னை தெரஸா கல்வி நிலைய  துணை முதல்வர் வி.தாட்சாயிணி உலக சுகாதார தினம் குறித்துப் பேசினார். மாணவர் விக்னேஷ் வரவேற்றார். இறுதியாண்டு மாணவி பவித்ரா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai