Enable Javscript for better performance
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறை தொடக்கம்

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் நுரையீரல் நோய் அறுவைச் சிகிச்சை துறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

     நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் கே.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா சிறப்புரையாற்றி நுரையீரல் நோய் அறுவைச் சிகிச்சை துறையைத் தொடங்கி வைத்தார்.

     இயக்குநர் ராஜகோவிந்தன், டீன்கள் காக்னே, அமரநாதன், பிங்கரே, மருத்துவக் கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி, உள்பட பலர் பங்கேற்றனர்.  இப்புதிய மருத்துவப் பிரிவில் ஆன்ஜியோகிராம், ஆன்ஜியோபிளாஸ்டி, 24 மணி நேர தீவிர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே, டிரட்மில், பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய வால்வு குறைபாடு, நுரையீரல் அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai