Enable Javscript for better performance
மருத்துவ நுழைவுத் தேர்வு ஆணை எரிப்பு போராட்டம்: 90 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ நுழைவுத் தேர்வு ஆணை எரிப்பு போராட்டம்: 90 பேர் கைது

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவ நுழைவு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான தடை ஆணையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

     புதுவை, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு நாடு தழுவிய அளவில் தேர்வு நடத்தப்பட்டு தேசிய அளவில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தகுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

     இதன் விளைவாக பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் வட மாநில மாணவர்கள் அதிகளவில் சேரும் வாய்ப்பு உருவாகி விடும்.

     நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் அண்மையில் விலக்கி தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. 

     தமிழகம், புதுச்சேரியில் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்படைவர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஆணை நகல் எரிப்பு போராட்டம்: முழுமையாக விசாரிக்காமல் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இத்தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது எனக்கூறி புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராஜர் சிலை அருகே பொது நுழைவுத் தேர்வு ஆணை நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.   போராட்டத்துக்கு கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தடை உத்தரவு விலக்கப்பட்ட ஆணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 90-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai