Enable Javscript for better performance
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி

    By காரைக்கால்  |   Published on : 15th April 2016 07:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கையாளுவது குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

    தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வாக்குச்சாவடியில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளுக்கான முதல்கட்ட பயிற்சி ஏப்ரல் 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து 2-ஆம் கட்டப் பயிற்சி, பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் 13-ஆம் தேதி தொடங்கியது. இப்பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாழுவது குறித்து நடத்தப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள 159 வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், வாக்குப்பதிவு தொடங்கும் முன் இயந்திரத்தை செயல்பாட்டுக்கு திறக்கும் முறை, பழுது ஏற்படும்பட்சத்தில் மாற்று இயந்திரத்தை பயன்படுத்துவது, வாக்குப்பதிவு முடிந்தவுடன், முறைப்படி இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்துவது உள்ளிட்டவை குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.

    காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் மோகன், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் சிவக்குமார், செந்தில் ஆகியோர் பயிற்சியளிக்கின்றனர். ஏப்ரல் 20-ஆம் தேதி வரை இப்பயிற்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி சாந்தாவில்லியம்ஸ் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai