Enable Javscript for better performance
மீன்பிடி தடைக்கால நிவாரணம்: தேசிய மீனவர் பேரவை கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மீன்பிடி தடைக்கால நிவாரணம்: தேசிய மீனவர் பேரவை கோரிக்கை

    By  புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாள் ஒன்றுக்கு ரூ.500 மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ கோரியுள்ளார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதி மீனவர்கள் வங்காள விரிகுடா கடலில் மீன்பிடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

     ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு கிழக்கு கடல் பகுதியில் இந்த தடைகாலம் பரிந்துரைக்கப்பட்டாலும் 5 ஆண்டுகளுக்குள் இதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேற்கு கடல் பகுதிக்கு ஜூன், ஜூலை மாதங்களில் தடைகாலமாகும்.

     இதனால் ஆந்திரம், ஒடிசா போன்ற மாநிலங்களில் கடந்த ஆண்டில் இருந்து இந்த 61 நாள்கள் உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 நாள்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் மே 31 -ஆம் தேதி வரை 47 நாள்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

     இந்த கால கட்டங்களில் ஒவ்வொரு மீனவ குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டில் தலா ரூ.2 ஆயிரமும், புதுச்சேரியில் தலா ரூ.4 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

     இந்த தொகை ஒரு குடும்பத்துக்கு தினசரி செலவுக்கு ரூ.100 கூட கிடைக்காது என்பதால் வேறு எந்த மாற்றுத் தொழிலையும் செய்ய தெரியாத மீனவர்கள் பட்டினியால் வாட வேண்டியுள்ளது.

     இதனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் தடைகாலத்தில் நாள் ஒன்றுக்கு, குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.500 நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.  தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் அறிக்கை வெளியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.500 நிவாரண உதவியாக வழங்குவோம் என்று அறிவிக்க வேண்டும் என்று மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.  மாநில அரசுகளும், அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்பதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார் இளங்கோ.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai