Enable Javscript for better performance
வீட்டில் 10 பவுன் நகை, ரூ.70,000 திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    புதுச்சேரியை அடுத்த தொண்டமாநத்தம் பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சங்கர் (45). இவர் நெல்லித்தோப்பில் உள்ள தனியார் கிரானைட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

     இவர் புதன்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

     இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai