Enable Javscript for better performance
30 நாள்களுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த தடை- Dinamani

சுடச்சுட

    

    30 நாள்களுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த தடை

    By புதுச்சேரி  |   Published on : 15th April 2016 07:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் 30 நாள்களுக்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என்று புதுவை காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

     இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    புதுவையில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையில் 30 நாள்களுக்கு பேரணி, முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தக் கூடாது. இவற்றை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    மேலும் மாஹே, ஏனாம் பகுதிகளில் அப்பகுதி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் 2 நாள்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த உத்தரவு திருமணம், மத ஊர்வலம், இறுதிச் சடங்கு ஆகியவற்றைப் பாதிக்காது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai