Enable Javscript for better performance
அதிமுகவினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    By காரைக்கால்  |   Published on : 21st May 2016 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் தெற்குத் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் கே.ஏ.யு.அசனா மற்றும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்கால் தெற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கே.ஏ.யு.அசனா. இவர் கிளிஞ்சல்மேடு பகுதிக்கு கட்சியினருடன் வெள்ளிக்கிழமை சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அதிமுக காரைக்கால் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கருப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கே.ஏ.யு.அசனா, காரைக்கால் தெற்குத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி. இந்த பதவிக் காலத்தில் முழுமையானஅர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். தொகுதியின் பல்வேறு நிலை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். சட்டப்பேரவையில் என் மூலம் ஒட்டுமொத்த காரைக்கால் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான குரல் ஒலிக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai