Enable Javscript for better performance
அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் கிடைக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் கிடைக்குமா என, அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    புதுச்சேரியில் நடைபெற்று முடிந்துள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் தி.மு.க. சார்பில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா மற்றும் நிரவியில் கீதா ஆகிய இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ள புதுச்சேரி பேரவையில் ஆட்சி அமைக்க 16 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். ஆனால் காங்கிரஸிடம் 15 இடங்கள் மட்டுமே உள்ளன.

    இதனால் கூட்டணி கட்சியான திமுகவின் ஆதரவை நம்பி காங்கிரஸ் உள்ளது. இதனால் தி.மு.க.வுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் தி.மு.க.வை வளர்க்க வேண்டும், அதற்கு தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக அரசு சிறுபான்மை அரசாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்தது.

    அதே போல் புதுவையிலும் காங்கிரஸ் அரசில் திமுகவுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக மட்டுமே வந்துள்ளது. ஆட்சி அமைக்கவில்லை.

    ஆனால், புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்றுள்ளது. பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுகவில் மூத்தத் தலைவராக உள்ள உருளையன்பேட்டை தொகுதி

    எம்.எல்.ஏவும், தெற்கு மாநில அமைப்பாளருமான சிவாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என கட்சியினர் எதிர்நோக்கி உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai