Enable Javscript for better performance
ஜிப்மர் மருத்துவமனையை நிகழாண்டே பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மர் மருத்துவமனையை நிகழாண்டே பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

    By காரைக்கால்  |   Published on : 21st May 2016 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனையை நிகழாண்டே பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டுமென புதிய அரசுக்கு போராட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி.செல்வசண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    எங்கள் கோரிக்கையை ஏற்று, காரைக்காலில் தேர்தலை நேர்மையாக நடத்த ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியையும் நியமித்து தேர்தல் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுத்த தேர்தல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், காரைக்கால் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் நிறைவேற்ற ஒன்றுபட்டு, பேரவையில் பேசி, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்.

    கூட்டணி அமைச்சரவை அமைந்தால், காரைக்கால் பகுதியில் வெற்றிபெற்ற இருவருக்கு முக்கிய இலாக்காக்களுடன் கூடிய அமைச்சர் பதவி தரவேண்டும். காரைக்காலில் சிறப்பு மருத்துவமனை ஜிப்மர் திட்டத்தை நிகழாண்டே மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர புதிய அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். காரைக்கால் பகுதி அரசு அலுவலகங்களில் பி, சி, டி ஆகிய பிரிவு காலிப் பணியிடங்களை, காரைக்கால் பகுதியினரைக்கொண்டே நிரப்பவேண்டும். காரைக்காலில் 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை நிறைவேற்ற, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், காரைக்கால் தனி யூனியன் பிரதேசக் கோரிக்கைக்காகவும், விரைவில் போராட்டக் குழு அமைதி வழி போராட்டங்களை நடத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai