Enable Javscript for better performance
கலை இலக்கிய திங்கள் விழா- Dinamani

சுடச்சுட

    

    பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் அரசு அருங்காட்சியகத்தில் பாவேந்தரும் சிறார்களும், இந்திய சிற்பிகள் நேருவும் இந்திராவும் ஆகிய தலைப்புகளில் கலை இலக்கிய திங்கள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இதில், கலைமாமணி கோ.பாரதி தலைமை வகித்துப் பேசுகையில், பதவி உயர்வை ஏற்க மறுத்து தொடக்கப் பள்ளி ஆசிரியராகவே பணிபுரிந்து தமிழ் வளர்த்த பாரதிதாசனுக்கு 125ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி கணபதி செட்டிக்குளம் நுழைவு வாயிலில் சிலை அமைக்க வேண்டும், இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும், இந்திராகாந்தி மையம் ஒன்றையும் அரசு நிறுவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
     நிகழ்ச்சியில் பேரவை துணைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, தென்னவன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai