Enable Javscript for better performance
தாய் கண்டிப்பு: மகள் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் வீட்டு வேலை செய்யவில்லை என தாய் கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     புதுச்சேரி சோலைநகர் கசாப்புக்காரன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சலவைத் தொழிலாளி சுந்தர். இவருடைய மனைவி கலையரசி வீடுகளில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள் புஷ்பலதா (22). இவர், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையில் பணி பயில்பவராக இருந்து வந்தார்.
     இந்நிலையில், சனிக்கிழமை காலை புஷ்பலதா வீட்டில் வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் அவரது தாய் கண்டித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
     மாலையில் வீடு திரும்பியபோது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ளவர்களின் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு மகளை கொண்டு சென்றார்.
     அங்கு புஷ்பலதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai