Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

    By புதுச்சேரி,  |   Published on : 28th November 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி சார்பில், பிளஸ்-2 மாணவர்களுக்கான சிகரத்தை வெல்வோம் உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமமை நடைபெற்றது.
     விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி எஸ்.மார்ஸ் கல்விக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
     தொலைக்காட்சி பேச்சாளர் கோபிநாத் பேசுகையில், மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பெற்றோருக்கான கடமையாக தேர்வில் வெற்றி பெற வேண்டும். கல்வியே பெரிய ஆயுதம். அதைக் கொண்டு உலகையே ஆளலாம் என்றார்.
     கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், எந்தக் கல்வியை தேர்வு செய்து பயின்றால் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை தேர்வு செய்து படிக்கலாம். கல்வியோடு கூடிய தொழில்திறன் சான்றிதழ் படிப்புகளையும் படிக்க வேண்டும் என்றார்.
     கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தனர். முதல்வர் கே.வெங்கடாசலபதி வரவேற்றார்.
     புதுவை பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் தங்கப்பதக்கம் மற்றும் 10 இடங்களைப் பெற்றவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
     இதில், 9000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டடவியல் துறைத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai