Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு விவகாரம்: ரயில் மறியல்: 30 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரம்: ரயில் மறியல்: 30 பேர் கைது

    By புதுச்சேரி  |   Published on : 28th November 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழர் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 30 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
     இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், புதுவை ரயில் நிலையத்தில் திருப்பதி செல்லும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சாமானிய பொதுமக்கள் குறித்து கவலைப்படாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததுடன், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாக தற்போது ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்ததாக பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும், உடனடியாக அவர் பதவி விலகக் கோரியும் குரல் எழுப்பினர்.
     அதனைத் தொடர்ந்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai