Enable Javscript for better performance
வேட்டையாடப்பட்ட அரிய வகை பறவைகள் சிக்கின: வனத் துறை நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வேட்டையாடப்பட்ட அரிய வகை பறவைகள் சிக்கின: வனத் துறை நடவடிக்கை

    By புதுச்சேரி  |   Published on : 28th November 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே வில்லியனூர் வயல்வெளி பகுதியில் வேட்டையாடப்பட்ட 60 பறவைகளை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
     வில்லியனூர் பகுதியில் வயல்வெளிக்கு வரும் பறவைகளை வேட்டையாடி பொதுமக்களுக்கு நரிக்குறவ இன மக்கள் விற்பனை செய்வதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது.
     இதையடுத்து, வனத் துறை காப்பாளர் குமார் உத்தரவின் பேரில் வனத் துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் வில்லியனூர் பகுதிக்கு சென்றனர். அப்போது, அவர்களைக் கண்டதும் சிலர் தப்பியோடி விட்டனர். அந்த இடத்தில் விற்பனைக்கு வைத்திருந்த நீல தாழ கோழி, நாரை, நீர் வாத்து, உள்ளிருத்தி, குயில் போன்ற 60 அரிய வகை பறவைகளும், உடும்பு ஒன்றையும் வனத் துறை ஊழியர்கள் கைப்பற்றினர்.
     இதே போல, உயிருடன் சில பறவைகளையும் கைப்பற்றிய வனத் துறையினர், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து, தன்னார்வலர் கார்த்திக் கூறியது: அரிய பறவைகளை உண்ணும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai