Enable Javscript for better performance
வேன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ டிராவலர் வேன் கடத்தப்பட்டது.
     புதுச்சேரி சுப்பையா சாலையைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (49). இவர், டெம்போ டிராவலர் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
     இந்நிலையில்,டெம்போ டிராவலரை அதன் ஓட்டுநர் சுப்பையா சாலையில் எப்போதும் நிறுத்தும் இடத்தில் சனிக்கிழமை நிறுத்தி விட்டு புருஷோத்தமனிடம் சாவியை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
     இந்நிலையில் இரவில் புருஷோத்தமன் பார்த்தபோது டெம்போ டிராவலர் வேன் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
     உடனடியாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai